காத்தான்குடியில்சட்டவிரோத மாடு கடத்தல் முறியடிப்பு :ஆறு மாடுகள் மீட்பு

Sri Lanka
By Nafeel Apr 20, 2023 07:54 PM GMT
Nafeel

Nafeel

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு பிக்கப் ரக வாகனம் ஒன்றில் 6 மாடுகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற இருவரை நேற்று புதன்கிழமை (19) காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. ரஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் கொஸ்தாப்பர் பாலித, பிகிறாடோ, ருஷாந்தன், நவகீதன், சுபைர் ஆகியோர் சம்பவதினம் பிற்பகல் ஒரு மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனத்தை பின் தொடர்ந்து அதனை காத்தான்குடி பகுதியில் வைத்து மடக்கிபிடித்து சோதனையிட்டபோது அதில் 6 மாடுகளை போலி அனுமதிப்பத்திரம் ஊடாக சட்டவிரோதமாக கடத்திச் செல்வதை கண்டறிந்ததையடுத்து

இருவரை கைது செய்ததுடன் 6 மாடுகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்கப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டு குற்ற விசாரணைப் பிரிவினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைந் சேர்ந்த 35 ,37 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்று மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தமை மாடுகளை சிறிய பகுதியில் அடைத்து சித்திரவதை செய்த போன்ற குற்றச் சாட்டின் கீழ் கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுககப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.