இலங்கையில் மீண்டும் மிரட்டும் கோவிட்: மொத்த எண்ணிக்கை 672,171 ஆக உயர்வு!

COVID-19 COVID-19 Vaccine Sri Lanka Sri Lankan Peoples
By Fathima May 01, 2023 07:17 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிதாக 7 பேர் கோவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,171 ஆக அதிகரித்துள்ளது.

இதனை  நேற்றைய தினம் (30.04.2023) அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிசெய்துள்ளது.

இலங்கையில் மீண்டும் மிரட்டும் கோவிட்: மொத்த எண்ணிக்கை 672,171 ஆக உயர்வு! | Covid Threatens Again In Sri Lanka

மீண்டும் கோவிட் வைரஸ்

இதேவேளை, நேற்று முன்தினமும் 5 பேர் கோவிட் தொற்றாளர்களாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில்  கோவிட் தொற்றால் இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் மிரட்டும் கோவிட்: மொத்த எண்ணிக்கை 672,171 ஆக உயர்வு! | Covid Threatens Again In Sri Lanka

இருவர் உயிரிழப்பு

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.