நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம்! மீண்டும் முகக்கவசம் அணிவது முக்கியம் - மக்களுக்கு எச்சரிக்கை

COVID-19 COVID-19 Vaccine Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri May 17, 2023 09:32 AM GMT
Mayuri

Mayuri

நாளாந்தம் உறுதிப்படுத்தப்படும் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் கோவிட் இறப்புகளை கருத்தில் கொண்டு, அடிப்படை மட்டத்தில் வைரஸ் பரவுவதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார். 

நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம்

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம்! மீண்டும் முகக்கவசம் அணிவது முக்கியம் - மக்களுக்கு எச்சரிக்கை | Covid Effect In Sri Lanka Today

இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

வழிகாட்டுதல்களை பின்பற்றுவது முக்கியம்

கைகளைக் கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கோவிட் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம்! மீண்டும் முகக்கவசம் அணிவது முக்கியம் - மக்களுக்கு எச்சரிக்கை | Covid Effect In Sri Lanka Today

அத்துடன் அநாவசியக் கூட்டங்களை மட்டுப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் நேற்றைய தினம் கோவிட் தொற்றுக்கு இலக்கான 13 பேர் அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW