கோவிட் கட்டுப்பாட்டை மீறிய இந்தியர் : 2 - வார சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் - ஸென்கோ வே (Senko Way) பகுதியில் உலகின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான லியோங் ஹப் (Leong Hup) செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்த 64 வயதான தமிழ்செல்வம் ராமய்யா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.
கோவிட் தொற்று
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, அலுவலகத்துக்கு வரும்போது, தனக்கு உடல் நிலை மோசமானதையடுத்து உடனடி கோவிட் பரிசோதனையில் ராமையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
அறையின் உள் நுழைய வேண்டாம் என மேலதிகாரியின் கட்டளையை மீறி உட்பிரவேசித்ததுடன் மேலதிகாரிகள் முகத்துக்கு நேரே இருமியுள்ளார்.
இதனையடுத்து அவர் மீது சக பணியாளர்களின் உடலாரோக்கிய பாதுகாப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் விசாரணையின் முடிவில் 2-வார சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிங்கப்பூர் சிறையிலிடப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில், 2021 செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தமை குறிப்பிடதக்கது.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |