கோவிட் காலத்தில் கட்டாய உடற் தகனம்! மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

COVID-19 COVID-19 Vaccine
By Mayuri Jul 23, 2024 11:03 AM GMT
Mayuri

Mayuri

கோவிட் - 19 காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கோவிட் - 19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்யப்பட்டன.

இதற்கமைய, 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை

அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கோவிட் - 19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

கோவிட் காலத்தில் கட்டாய உடற் தகனம்! மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி | Covid 19 Mandates Cremation Sri Lanka

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW