பேஸ்புக் தகவல்களை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
பௌத்தம் மற்றும் புத்த மதத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பௌத்தத்தையும் புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்காக Puss Buddha மற்றும் Followers of Puss Buddha என்ற பெயரில் சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் பக்கங்கள்
பௌத்தம் மற்றும் புத்த மதத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதன் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் அறிவித்தார்.