கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்

SL Protest Ceylon Teachers Service Union Sri Lankan Schools Teachers
By Mayuri Jun 26, 2024 08:56 AM GMT

கொழும்பில் போராட்டம் மேற்கொண்டு வரும் இலங்கை ஆசிரியர் சங்க போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இலங்கை ஆசிரியர் சங்கமானது போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், பொாலிஸார் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு

நீதிமன்ற தடையுத்தரவானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.

GalleryGallery