திருகோணமலையில் போதைப்பொருளுடன் கைதான நபரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவு

Sri Lanka Police Trincomalee Crime Madras High Court
By Fathima Aug 13, 2023 10:50 AM GMT
Fathima

Fathima

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் விசாரணை 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் - இக்கிரிகொல்லாவ பகுதியில் வசித்து வரும் அக்பர் முஹம்மது ரிபான் (35 வயது) என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

திருகோணமலையில் போதைப்பொருளுடன் கைதான நபரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவு | Court Order Arrested With Drugs Trincomalee

திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே சந்தேகநபர் சிக்கியுள்ளார். 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றமை தெரியவந்ததையடுத்தே அவரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.