நுகர்வோர் உரிமை குறித்து விழிப்புணர்வு

Sri Lankan Peoples Eastern Province Sri Lanka Customs School Incident
By Rakshana MA Jul 15, 2025 11:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று (15) இடம்பெற்றது.

அதன்படி, கல்முனை கமு/சாஹிரா (தேசிய பாடசாலையின்) காரியப்பர் மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்தர பிரிவு தலைவர் ஆசிரியர் எச்.எம்.ஏ றிபாய் தலைமையில் நடைபெற்றது.

பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

முழுமையான தெளிவு..

இதன்போது நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

நுகர்வோர் உரிமை குறித்து விழிப்புணர்வு | Consumer Rights Awareness Camp

மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம்.ஸாஜீத் புலன் விசாரணை அதிகாரி, எம்.எச்.எம்.றிபாஜ், ஏ.பி.எம்.காமீல் மற்றும் பிரதி அதிபர் மற்றும் பாடசாலையின் பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு

நிந்தவூர் பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery