நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்ட திருத்தம்

Parliament of Sri Lanka Sri Lanka Nalin Fernando
By Mayuri Jun 08, 2024 10:43 AM GMT
Mayuri

Mayuri

நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள நுகர்வோர் சட்டம் கடந்த 20 வருடங்களாக திருத்தம் செய்யப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

தற்போது சட்ட மா அதிபரின் கவனத்துக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

விரிவான சந்தை நடவடிக்கைகள் நாட்டில் இடம் பெறுவதால் நுகர்வோருக்கு அநீதி ஏற்படுவதை அறிய முடிகிறது. அதிக லாபத்தை நோக்காகக் கொண்டு வர்த்தகர்கள் செயற்படுகின்றனர். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.