கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை
கட்டுப்பாட்டு விலையயை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கந்தளாய் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவ்வாறு விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனையின் போது, அரிசி மற்றும் உப்பை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தேகத்திற்குரிய வர்த்தகர்களும் கண்டறியப்பட்டனர்.
பொதுமக்களின் சுகாதாரம்
இதையடுத்து, பல கடைகள் பரிசோதனையிற்குட்படுத்தப்பட்டன. சோதனையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் விலைச்சட்டங்களைப் பற்றி சிறப்பாக கவனிக்கப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





