ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

H M M Harees Sri Lanka Politician Sri Lankan Peoples Kalmunai
By Rakshana MA Feb 24, 2025 06:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் எடுத்த எத்தனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து விட்டது து என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் ஏ.சி.எஹியாகான் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று(23) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் காங்கிரஸின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் : முன்வைக்கப்பட்ட கோரிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் : முன்வைக்கப்பட்ட கோரிக்கை

பயனளிக்காத கட்சி..

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து நான்கு ஆண்டுகளாக சிந்தித்து கொண்டிருந்து இப்போது அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன்.  

என்னுடைய பிரதிப்பொருளாளர் பதவி அடங்கலாக கட்சியின் பதவிகளை இதுவரை துறக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் என்னை நீக்கிக்கொள்ளட்டும்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு | Conspiracy To Prevent Harish Contesting Elections

இந்த முஸ்லிம் காங்கிரஸில் யாரும் மக்களை பற்றி சிந்திக்க முடியாது. அவ்வாறு சிந்தித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்துள்ளேன்.

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும், பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார். ஆனால் இப்போதுள்ளவர்கள் தமது சொத்துக்களை நிரப்புவதற்காக இதனை பாவித்து வருகின்றனர்.

நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும், ஏமாற்றங்களையும் நேரடியாக சந்தித்தவனாக காணப்படுகின்றேன். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த எண்ணமுமில்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது.

நாட்டில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

நாட்டில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

இன,மத பேதமின்றி இணையும் மக்கள்

நாங்களும் அவர்களுக்கு தேவையாயின் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொகுதிக்கு கிடைத்த தேசிய பட்டியல் எம்.பிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம்.

எங்களுடன் ஒன்றாக இருந்த துரோகிகள் எங்களை பல இடங்களில் காட்டிக்கொடுத்து பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்.

எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக மக்களுக்கு சேவையாற்றவுள்ளேன்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயங்களில் ஒன்று சாய்ந்தமருதில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு | Conspiracy To Prevent Harish Contesting Elections

நாட்டிலுள்ள அநேகமான கட்சிகள் மீது மக்கள் வெறுப்புற்றுள்ளதாகவும் மக்களது நலனுக்காக மக்களது வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் மனோ நிலையில் இருப்பதாகவும் அவ்வாறான நிலை மாறி நாட்டையும், மக்களையும் பற்றி யோசிக்க கூடிய சிறந்தவர்கள் தங்களது கட்சியின் பக்கம் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் .

சுசந்த புஞ்சிநிலமே பிரதி அமைச்சராக இருந்த காலங்களில் இன,மத வேறுபாடின்றி அனைத்து மக்களதும் நாட்டினதும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.

எனவே நாட்டுப்பற்றுள்ள அனைத்து மக்களும் இன,மத பேதமின்றி தங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச் சடங்கு : நான்கு மாதங்களுக்குப் பின்ன முன்னெடுப்பு - LIVE

ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச் சடங்கு : நான்கு மாதங்களுக்குப் பின்ன முன்னெடுப்பு - LIVE

கோட்டாபயவை விட மோசமான விளைவை சந்திக்க நேரிடும்! சபையில் எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்

கோட்டாபயவை விட மோசமான விளைவை சந்திக்க நேரிடும்! சபையில் எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery