புறா மலையில் அழிந்துபோகும் ஆமைக் குஞ்சுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

Trincomalee Sri Lanka
By Nafeel Apr 23, 2023 05:21 PM GMT

திருகோணமலை மாவட்டத்தின்  புறாமலை பகுதியில் அதிகளவிலான  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகின்றது,

சுற்றுலா பயணிகள் நடமாடும்  கடலோரங்களில் மண்ணுக்குள்ளே விடுகின்ற ஆமை முட்டைகள் சேதமடைந்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

இதனால் அழிந்துவரும் அரிய வகை  ஆமைகளின் முட்டைகளை  பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள்  (22) நூற்று ஐம்பது  குஞ்சுகளை  பாதுகாத்து  மீண்டும்  கடலில் விடப்பட்டுள்ளன.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் புறாதீவுப் பகுதியின் பொறுப்பதிகாரி திரு. மஞ்சுள மொரத்தன்ன தலைமையின் கீழ் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

திருகோணமலை புறாமலைப் பகுதியில் அன்றாடம் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளை தரிசித்து வருகின்றார்கள்.இந்நிலையிலே இவ் ஆமை குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.