ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை - மக்களிடையே எழுந்துள்ள குழப்பம்

By Fathima Apr 13, 2024 07:38 AM GMT

எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை தொடர்பில் மக்கள் இடையே குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பொது விடுமுறை என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதி வங்கி மற்றும் வணிக விடுமுறை என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சகம் வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலில் பொது விடுமுறை

இது தொடர்பில் கருத்து தெரிவித்த உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, 15 ஆம் திகதி விடுமுறை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை - மக்களிடையே எழுந்துள்ள குழப்பம் | Confusion Regarding The Holiday On April 15

அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வங்கி விடுமுறையா என்பதை அறிய நீங்கள் வர்த்தமானி அறிவிப்பை பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அன்றைய தினம் வங்கி (Bank) மற்றும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.