முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்
இலங்கையில் அமைப்பு ரீதியான சார்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குகள் குறித்து அனைவருக்கும் நீதி அமைப்பு, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
காதுகளை மூடிய நிலையில், பரீட்சை எழுதினர் என்ற முறைப்பாட்டின் கீழ், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
மதப்பாகுபாடு
இந்தக் கொள்கை, மத அடக்கத்தை பின்பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று அனைவருக்கும் நீதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த கொள்கையானது முஸ்லிம் பெண்களை பாதிக்கிறது. இது இலங்கையில் முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான மத பாகுபாட்டின் சூழலை நிலைநிறுத்துகிறது என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற பொது நிறுவனங்களில் மாணவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோருவதாக அனைவருக்கும் நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |