இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அறிக்கை
ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் பல காரணிகளால் சீர்குலைந்துள்ளதாக அவர் மேலும் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும் மக்களும் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.