தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள்: பெஃப்ரல் அமைப்பு
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளுக்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கடமைகள்
ஜனாதிபதி தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை முன்னதாகவே கணக்கிடப்பட்டு வருவதாக ஜனாதிபதி தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாய்க்குப்பெட்டிகளைக் கொண்டு செல்வது உள்ளிட்ட தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |