குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த நீதியமைச்சர்

CID - Sri Lanka Police Crime Harshana Nanayakkara
By Laksi Dec 16, 2024 10:33 AM GMT
Laksi

Laksi

நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை அவர் இன்று (16) பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில் எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

முறைப்பாடு பதிவு 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அண்மையில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் “கலாநிதி ஹர்ஷன நாணயக்கார” என பதிவிடப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அது திருத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த நீதியமைச்சர் | Complaint To Minister Of Justice C I D

பெயர்களை பதிவேற்றியதில் தவறு இருப்பதாக நாடாளுமன்ற தலைமைச் செயலகம் கடிதம் அனுப்பியதாகவும் நீதி அமைச்சர் இதன்போது கூறினார்.

எனினும் இது குறித்து தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

மின் கட்டணக்குறைப்பு : பொதுமக்களின் கருத்து பதிவிடல் நாளை முதல்!

மின் கட்டணக்குறைப்பு : பொதுமக்களின் கருத்து பதிவிடல் நாளை முதல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW