முச்சக்கரவண்டி சாரதிகள் மீது குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் மக்களிடம் நியாயமற்ற விதத்தில் பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
முறைசாரா சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி
நாட்டில் இயங்கி வரும் முறைசாரா சேவையினால் ஈடுபடும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சூரிய அஸ்தமனத்தை பார்க்க தொடருந்தில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, மீண்டும் முச்சக்கரவண்டி சேவை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.