எரிவாயு சிலிண்டர் குறித்த முறைப்பாடு அடிப்படையற்றது: தேர்தல்கள் ஆணைக்குழு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 20, 2024 01:00 PM GMT
Mayuri

Mayuri

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன்வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு

தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எரிவாயு சிலிண்டர் குறித்த முறைப்பாடு அடிப்படையற்றது: தேர்தல்கள் ஆணைக்குழு | Complaint About Cooking Gas Cylinder

அவர் மேலும் தெரிவிக்கையில், தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளார்கள். எதிர்வரும் 26ஆம் திகதி வாக்களிப்பு அட்டைகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும்.

செப்டெம்பர் 21ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வாக்களிப்பு அட்டைகள் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஆணைக்குழுவில் முறைப்பாடு

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னம் குறித்து ஒரு தரப்பினர் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்கள்.

எரிவாயு சிலிண்டர் குறித்த முறைப்பாடு அடிப்படையற்றது: தேர்தல்கள் ஆணைக்குழு | Complaint About Cooking Gas Cylinder

இந்த முறைப்பாடு அடிப்படையற்றது. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கு அமைவாகவே சிலிண்டர் சின்னம் ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நபருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த முரண்பாட்டை நிராகரித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW