வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேட கொடுப்பனவு - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lankan Peoples Floods In Sri Lanka M.L.A.M. Hizbullah
By Rakshana MA Jan 23, 2025 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்(Hizbullah) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை நேற்று(23) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த திட்டமானது முக்கியமானதொரு வேலை திட்டமாகும்.

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் பொறுப்பேற்பு

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் பொறுப்பேற்பு

கிளீன் ஸ்ரீலங்கா

உலகில் பல நாடுகளில் இந்த வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இவ்வாறான வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியிலும் பெரிய மாற்றங்களை அடைந்துள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான நல்ல எண்ணத்துடன் இங்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டால், அவ்வேலைத்திட்டம் சிறப்பாக வளர்ச்சியடைந்து நாட்டுக்கு நன்மை சேர்க்க நாம் பிராத்திக்கின்றோம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேட கொடுப்பனவு - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை | Compensation To Flood Affected Farmers Hizbullah

மேலும், இந்த திட்டம் தொடர்பில் பிரதமர், சபையில் தெளிவுபடுந்தியிருந்தாலும் இன்னும் இத்திட்டமானது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவாக சென்றடையவில்லை. அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறும், இந்த வேலைத்திட்டத்தை தாம் வரவேற்பதோடு, முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளேன்.

குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் ஏனைய நாடுகள் இத்திட்டத்தின் ஊடாக எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்று பார்க்கும் போது இது உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

ஆலோசனைகள்

எனவே, நாம் உள்ளூராட்சி மன்றங்களை இத்திட்டத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டும். அதற்கான ஆளனி, இயந்திர வசதிகள் எம்மிடம் இருக்கின்றது. அவர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் துப்பரவு பணிகளை மேற்கொள்ளல், வடிகான் துப்பரவு, மரங்களை நடுதல், கிராமங்களை அழகு படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளலாம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேட கொடுப்பனவு - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை | Compensation To Flood Affected Farmers Hizbullah

அதேபோல், தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் திறந்திருப்பதால் அதிகமான வயல்நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெட்டுவதற்கு ஆயத்தமான நிலையில் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அவர்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேங்காய் விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அம்பாறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு

அம்பாறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW