தயாசிறியின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு
Parliament of Sri Lanka
Dayasiri Jayasekara
Jagath Wickramaratne
By Dev
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(23.05.2025) அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தயாசிறி ஜயசேகரவின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்கள்
விசாரணைக் குழுவின் தலைவராக துணைக் குழுத் தலைவர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் கயந்த கருணாதிலக ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.