கொலன்னாவ உள்ளிட்ட சில பகுதிகளில்10 மணிநேர நீர்வெட்டு

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 28, 2023 12:26 AM GMT
Fathima

Fathima

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் (29) காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

கொலன்னாவ உள்ளிட்ட சில பகுதிகளில்10 மணிநேர நீர்வெட்டு | Colombo Water Cut Schedule Important Announcement

கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரேகோட்டே, நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அருகில் உள்ள ஏனைய வீதிகளில்  நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொலன்னாவ நீர்விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.