தொடருந்து சேவையில் தாமதம்! வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Railways
By Madheeha_Naz
பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகிய தொடருந்து போத்தலை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.