கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Colombo Jaffna Sri Lanka
By Fathima Apr 07, 2023 09:06 PM GMT
Fathima

Fathima

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார். 

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில்  திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Colombo To Jaffna Train Schedule Sl

திருத்தப் பணிகள்

எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி தொடருந்து  சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான தொடருந்து சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Colombo To Jaffna Train Schedule Sl

நேரடி தொடருந்து சேவை

எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,  ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.