கொழும்பு பங்கு சந்தை தற்காலிகமாக நிறுத்தம்
கொழும்பு பங்குச் சந்தை S. & P. இலங்கை குறியீட்டின் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஏற்பட்ட சரிவு காரணமாக பங்குச் சந்தை, சிறிது நேரம் வர்த்தகத்தை இன்று(07) காலை நிறுத்தியுள்ளது.
இலங்கை பங்குச் சந்தையின் பங்குச் சந்தை குறியீடு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்ததால், கொழும்பு பங்குச் சந்தையின் பங்குச் சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பங்கு சந்தை
இந்நிலையில், வர்த்தகம் நிறுத்தப்பட்டபோது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 639.01 யூனிட்கள் குறைந்து,14,734.34 யூனிட்களாக இருந்தது.
எஸ். & பி. கொழும்பு பங்குச் சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை குறியீடு 240.45 புள்ளிகள் குறைந்து, 4,292.90 புள்ளிகளாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |