சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
Stock Market
By Rakshana MA
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன.
அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.
சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்
இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.
இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |