கொழும்பு ஜூம்மா பள்ளிவாசல் பகுதி மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Colombo
By Fathima Mar 25, 2023 12:29 AM GMT

கொழும்பு 2 வேங்கந்த ஜூம்மா பள்ளிவாசலில் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த மலாக்கா ஆளுனரினால் ஆரம்பிக்கப்பட்ட டி.எம்.டி.ஐ திட்டத்தின் கீழ் சிலேவ் ஐலன்ட் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மலேசியா நாட்டின் இலக்கைக்கான உயர் ஸ்தானிகர் பதி ஹிஸாம் அதாம் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வை வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிர்வாகத் சபைத் தலைவர் பசீர் லத்தீப் மற்றும் இலங்கைகான மலாயர் டி.எம்.டி.ஐ திட்டத்தின் தலைவர் அன்வரும் கலந்து கொண்டார்.

கொழும்பு ஜூம்மா பள்ளிவாசல் பகுதி மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு | Colombo Jumma Mosquefat