கொழும்பில் துப்பாக்கிச்சூடு: இளம் இளைஞன் பலி
By Fathima
கொழும்பு – வாழைத்தோட்டம் - மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(30.07.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்த்துள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.