கட்டுநாயக்க பகுதியில் அதிசொகுசு பேருந்து விபத்து: இருவர் பலி
Sri Lanka Police
Bandaranaike International Airport
Batticaloa
Accident
By Madheeha_Naz
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (22) இரவு கட்டுநாயக்க பகுதியில் குறித்த விபத்து நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், விபத்தின் பின் குறித்த குதியில் கூடிய மக்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

