குடைசாய்ந்த பேருந்து: காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - பதுளை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15.07.2023) காலை பதுளை- தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே நிற்கும் வகையில் தலைகீழாகக் கவிழ்ந்து பாதையின் பக்கவாட்டு பள்ளத்தில் குடை சாய்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம்
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு, அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.