தேங்காய் விலை உயர்வுக்கான காரணம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Fathima Jul 18, 2023 10:14 AM GMT
Fathima

Fathima

சந்தையில் தேங்காய்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்காக காணரம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபை அம்பலப்படுத்தியுள்ளது.

அதன்படி, இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை வைத்து நுகர்வோருக்குத் தேங்காய்களை விற்பனை செய்வதே பிரதான காரணம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு தொடர்பில் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் வழங்கும் தேங்காய்களின் விலைக்கும் சந்தையில் தேங்காய்களின் விலைக்கும் அதிக வித்தியாசம் காணப்படுகின்றது.

தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் | Coconut Price Hike In Sri Lanka  

ஏல விற்பனை

தற்போது இடைத்தரகர்கள் கட்டுப்பாடின்றி தேங்காய் விலையை கையாளப்படுகின்றது.

அத்துடன், தென்னைச் செய்கையாளர்களிடமிருந்து 50–55 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் பெறப்படும் ஒரு தேங்காய் கொழும்பு போன்ற நகரப் பகுதிகளில் 100–120 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்படும் தேங்காய் ஏலத்தில், தேங்காய் ஒன்று 57–60 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகபட்ச விலை சுமார் 63 ரூபாவாக உள்ளது.

மேலும், தேங்காயின் விலையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தென்னை விவசாயிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் முறையான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.