தேங்காய் எண்ணெய் மோசடி! அதிகரித்துள்ள முறைப்பாடுகள்
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு அனுப்பப்படும் மோசடி தொடர்ந்தும் நடைபெறுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சமீரா முத்துக்குடா(Sameera Muththukuda) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் 1ஆம் திகதி முதல் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
பொருத்தமற்ற விற்பனை நிலையங்கள்
இதன்படி, இந்த சோதனையில் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.
அத்துடன் 5000இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்தமைக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது”என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |