காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Climate Change Weather
By Fathima Jan 19, 2026 04:41 AM GMT
Fathima

Fathima

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சீரான வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு | Climate Change Warning To The Public

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.