மக்களே அவதானம்! நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி

Sri Lankan Peoples Climate Change Weather
By Chandramathi Apr 03, 2024 02:18 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

பலத்த மழை

அதேநேரம் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மக்களே அவதானம்! நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி | Climate Change Warning For Public

எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.