நாட்டில் பல மாகாணங்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மழை பெய்யும் சாத்தியக்கூறு
அத்துடன், வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |