1 மணிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 03, 2025 02:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

அதாவது, வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடத்தின் ஒருங்கிணைப்பே இவ்வாறு பாதித்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளது.

இன்றைய(03) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலின் போது அடிப்படை உரிமையை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும்

தேர்தலின் போது அடிப்படை உரிமையை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும்

வானிலை மாற்றம்

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 1.00 மணிக்குப் பிறகு அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு, மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 மணிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம் | Climate Change Today

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு திட்டம் குறித்து அநுர தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

மின்சாரக் கட்டண அதிகரிப்பு திட்டம் குறித்து அநுர தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

எச்சரிக்கை 

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

1 மணிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம் | Climate Change Today

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பில்லியன் கணக்கில் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி! வெளியான அதிர்ச்சி தகவல்

பில்லியன் கணக்கில் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி! வெளியான அதிர்ச்சி தகவல்

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW