பல மாவட்டங்களில் ஏற்பட்டவுள்ள வானிலை மாற்றம்
நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான (24) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மிதமான பலத்த காற்று சுமார் (30-40) முடிச்சுகள் வரை வீச வாய்ப்புள்ளது.
இதன்போது, இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |