அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம்! காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
By Fathima
கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
அதன்படி இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் 56.9 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.