பேரீச்சம் பழத்திற்காக பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல்

Ramadan Dates Mosque
By Rakshana MA Mar 18, 2025 10:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

களுத்துறை(Kalutura) பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், மானியமாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் கோபமடைந்து பள்ளிவாயலின் மௌலவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கு தாக்கப்பட்ட நபர் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலின் மௌலவி என்று கூறப்படுகிறது.

இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு முக்கிய அறிவித்தல்


பேரீச்சம் பழ பொதி வழங்காதது தொடர்பாக சந்தேக நபர் மௌலவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரீச்சம் பழத்திற்காக பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல் | Cleric Attacked Over Date Fruit Subsidy

தாக்குதலுக்கு உள்ளான மௌலவி களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

சம்மாந்துரையில் கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்

சம்மாந்துரையில் கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW