மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்! ஒத்துழைப்பு வழங்கியுள்ள மக்கள்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மூதூரில் உள்ள பொது மயானங்களை துப்புரவு செய்யும் சிரமதானப்பணி இடம்பெற்றுள்ளது.
குறித்த சிரமதானப்பணியானது, இன்று(01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக, மூதூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.ஜெம்சீத் தலைமையில் நடைபெற்றுள்ளது.
சிரமதானம்
மேலும், இதன் போது மூதூரில் உள்ள நான்கு பொது மயானங்களின் உள்பகுதி, வெளிப்பகுதி என்பன சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
இதில் மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம மக்கள் என பலர் பங்குபற்றி சிரமதானப்பணியினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூர் ஆட்சி மன்றங்களிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |