வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் காயம்
Batticaloa
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Rakshana MA
3 months ago

Rakshana MA
வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்று(24) செம்மண்ணோடையில் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கிடையிலான மோதல்
அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியைில், இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த தகராரில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |