கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars Export
By Rakshana MA Dec 28, 2024 01:40 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப்பொருள்களில் ஒன்றான கறுவாச்செய்கையின் மூலம் வருடத்திற்கு 500மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் ஒரு வருடத்திற்கு சுமார் 25,000 மெட்ரிக் தொன்கள் கறுவா, இதில் கிட்டதட்ட 19,000 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை தற்போது சுமார் 250 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

இரட்டிப்பாக்கும் திட்டம் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொடர்ந்தும் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம் | Cinnamom Export Earning In Sri Lanka

அதன்படி, பாரம்பரியமாக கறுவா பயிரிடப்பட்டு வரும் காலி, மாத்தறை ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கு மேலதிகமாக குருநாகல், புத்தளம் மற்றும் மகாவலி பிரதேசங்களில் கறுவா செய்கையை விரிவுபடுத்த கறுவா அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, கறுவா ஏற்றுமதி தொடர்பில் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவிற்கு ரிஷாட் இரங்கல்

மன்மோகன் சிங் மறைவிற்கு ரிஷாட் இரங்கல்

அபிவிருத்தி திணைக்களம் 

இதன் மூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கறுவாய் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு சீனாவுக்கும் கிடைக்கும். இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு கறுவா ஏற்றுமதியை அதிகரிக்கவும் கறுவா அபிவிருத்தி திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

கறுவா ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் இலாபம் : திட்டமிட்டுள்ள திணைக்களம் | Cinnamom Export Earning In Sri Lanka

எவ்வாறாயினும், இந்நாட்டில் பெரும்பாலான கறுவா தொழில் மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் அதை மதிப்பு அதிகரிக்கப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்ய முடிந்தால், அது அந்நிய செலாவணியை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டது.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவா வியாபாரிகளை பெறுமதி சேர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பதற்காக கறுவா அபிவிருத்தி திணைக்களம் ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

100 நடமாடும் நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் எஸ்.பி திஸாநாயக்க குற்றச்சாட்டு

100 நடமாடும் நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் எஸ்.பி திஸாநாயக்க குற்றச்சாட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW