நாட்டில் சிகரெட் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Excise Department of Sri Lanka Drugs
By Harrish May 30, 2024 04:09 PM GMT
Harrish

Harrish

நாட்டில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேருக்கு மேல் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் நாளை (31) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டிற்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

இலங்கையில் தற்போது சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சிகரெட் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Cigarette Consumption In The Country

இந்நிலையில், புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது.

உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கை முன்னெரினாலும் இதுவரை சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நாட்டில் சிகரெட் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Cigarette Consumption In The Country

மேலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார். 

டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும் அமெரிக்க செல்வந்தர்

டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும் அமெரிக்க செல்வந்தர்

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW