குற்ற விசாரணைப்பிரிவிடம் நட்டஈடு கோரும் கெஹலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருந்து பொருள் இறக்குமதி
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் கெஹலியவின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் காவிந்த பியசேகர மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தரம் குறைந்த மருந்து பொருள் இறக்குமதி தொடர்பில் குற்றம் சுமத்தி சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.