பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம்

Sri Lanka Police Christmas Sri Lanka Festival
By Laksi Dec 20, 2024 11:08 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண சிவில் உடையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

விசேட வேலைத்திட்டம்

கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் | Christmas And Newyear Police Warning For People

மேலும், உங்களைச் சுற்றியுள்ள அந்நியர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறும் உங்கள் சொத்து மற்றும் பணத்தைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

அல் ஆலிம் ப‌ரீட்சை தொடர்பில் ரிசாட் கூறியிருப்ப‌து தவறு: உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

அல் ஆலிம் ப‌ரீட்சை தொடர்பில் ரிசாட் கூறியிருப்ப‌து தவறு: உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு குருதிக் கொடை

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு குருதிக் கொடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW