இலங்கையில் சீனாவின் புதிய திட்டம்

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Government of China China Economy of Sri Lanka
By Chandramathi Apr 29, 2023 11:38 PM GMT
Chandramathi

Chandramathi

புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“சீன எரிபொருளைக் கொண்ட 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்

இலங்கையில் சீனாவின் புதிய திட்டம் | China Lube Oil Refinery In Sri Lanka

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தால், நாளாந்தம் 4 மெட்ரின் தொன் மசகு எண்ணெண் சுத்திகரிப்பினை நாட்டில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றால், இவ்வாண்டுக்குள் 120 - 140 மில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்

நாம் அறிந்த வகையில் இலங்கை ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மாத்திரமே காணப்படுகிறது. அது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.

அதன் இயந்திரங்களும் மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. எனவே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம்.

இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும்.

இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது சீன பெற்றோலிய நிறுவனத்தின் தீர்மானமாகும்.

அரசாங்கம் என்ற ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதன் பிரதிபலன் நுகர்வோரையே சென்றடையும்.”என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now