பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools Education
By Fathima Sep 24, 2023 01:05 PM GMT
Fathima

Fathima

நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடை

இந்த ஆண்டு 70 வீதமான பாடசாலை சீருடைகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு | China Help Srilankan School Students Uniform

இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கு தேவையான பாடசாலை சீருடைகளையும் வழங்க சீனா இணங்கியுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.