இலங்கை விதித்த தடை: கவலை வெளியிட்ட சீன பிரதமர்
சீனாவைக் குறிவைத்து இலங்கையின் வலயத்திற்குள் வெளிநாட்டுப் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் சீனப் பிரதமர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, சீனப் பிரதமர் லீ யாங்குடன் கலந்துரையாடியபோதே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
சீன கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இதேபோன்று ஜேர்மன் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சீன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
தவறாக பயன்படுத்துவதற்கு இலங்கை இடமளிக்காது
இதன்போது குறைபாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே ஜேர்மன் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு நாடும் தனது இறையாண்மையை மற்றுமொரு நாட்டின் தேவைக்கு ஏற்ப தவறாக பயன்படுத்துவதற்கு இலங்கை இடமளிக்காது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.