கோர விபத்துக்குள்ளான அரச பேருந்து: பலர் படுகாயம்
புதிய இணைப்பு
கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து கோர விபத்திற்கு முகங்கொடுத்த நிலையில், அதற்கு சாரதியின் செயற்பாடு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் அதிக வேகமே விபத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்த விபத்தின் போது லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த ஏனைய இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே – கலஹிடியாவ பிரதேசத்தில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று (04) காலை ஏற்பட்டுள்ளது.
தேவால சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹலவத்த பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |